இங்கிலாந்தில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

1 Min Read

லண்டன், ஜூன் 11- இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக சிறுவர்களுக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்து அரசிடம் பெற்றோர்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக வலைத்தள பயன்பாட் டிற்கு தடை விதித்துள்ளன. இதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, இங்கிலாந்தில் 16 வயதுக் குட்பட்ட சிறுவர்கள், தங்களுக்கு தீங்கு விளை விக்கும் ஆபத்தான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சிறுவர்களைப் பாதுகாக்க எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலும் அவற்றை எதிர்க்க அரசு தயங்காது என்றும் அறிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *