‘நீட்’ கலந்தாய்வு தாமதம்! பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக இடம் பிடிக்கும் மருத்துவ மாணவர்கள்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 4- நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை நீட்  நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மறுதேர்வு காரண மாக, வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் தள்ளிப்போயுள்ளது.

வரும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில்தான் சேர்க்கை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தாமதத்தால் உயர் கல்வி சேர்க்கையில் புதிய சூழல் உருவாகி யுள்ளது.

மருத்துவக் கனவில் உள்ள மாணவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாற்று ஏற்பாடாகப் பொறியியல் கல்லூரிகளில் சேரத் தொடங்கியுள்ளனர். வழக்கமாக பொறியியல் இடங்களில் சுமார் 10 சதவீதம் இடங்களை மருத்துவ மாணவர்கள் தற்காலிகமாகக் கைப்பற்றுவது வழக்கம்.

ஆனால், தற்போதைய தாமதத்தால் இந்த இடங்களை அவர்கள் நீண்ட காலம் தங்களது வசம் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கலந்தாய்வு சுற்றுகளை நடத்த வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

அமிட்டி பல்கலைக்கழகம் (சுஷ்மா எஸ் ரவாத்): இக்காலதாமதம் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தத்தையும் நிச்சய மற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி பல்கலைக் கழகம் (சரோஜ் சர்மா): மருத்துவத்தை முதன்மை தேர்வாகக் கொண்ட பல மாணவர்கள் முன்னெச்சரிக்கையாகப் பொறியியல் இடங்களை முன்பதிவு செய்து வைத்து காத்திருக்கின்றனர்.

மருத்துவப் படிப்பில் நிலவும் குழப்பத் தால், மாணவர்கள் பி.டெக் பயோடெக்னா லஜி மற்றும் உயிரியல் அறிவியல் சார்ந்த மாற்றுப் படிப்புகளை நோக்கி அதிகளவில் படையெடுக் கின்றனர்.

இருப்பினும், பயோ சார்ந்த பி.டெக் படிப்புகளில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் கலந்தாய்வு மூலம் விலகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் ஒன்றிய அரசின் மெத் தனப் போக்கால் பல ஆயிரம் மாணவர்கள் தகுதி இருந்தும் மருத்துவக் கல்வி கிடைக்காமல் போய்விடுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *