வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, ஏப்.3 வக்ஃபு திருத்த மசோதாவை ‘கருப்புச் சட்டம்’ என விமா்சித் துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஅய்எம்பிஎல்பி), இம்மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித் துள்ளது. இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய உறுப்பினா் முகமது அதீப், டில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முஸ்லிம் சமூகத்தினரின் சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியே வக்ஃபு திருத்த மசோதாவாகும். இதை எங்களால் ஏற்க முடியுமா? வக்ஃபு திருத்த மசோதா, நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது. மனசாட்சியுள்ள அனைத்து குடிமக்களும் இம்மசோதாவை எதிர்க்க வேண்டும். இது, நாட்டை காப்பதற்கான போராட்டம். எங்களைப் பொறுத்தவரை, சட்ட ரீதியாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் கடுமையாக எதிர்ப்போம். இம்மசோதா திரும்பப் பெறப்படும் வரை ஓயப் போவதில்லை என்றார்.

அழிக்கப்படும் தன்னாட்சி

முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் துணைத் தலைவா் முகமது அலி மோசின் கூறியதாவது: முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை வக்ஃப் வாரியத்தில் இடம்பெற செய்வதன் மூலமும் அதன் தன்னாட்சி அழிக்கப்படுகிறது. இம்மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையில் எங்களின் கவலைகளுக்கு தீா்வு காண்பதற்கு பதிலாக குறைபாடுகளே நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றார் அவா். பிற முஸ்லிம் அமைப்புகளும் இம்மசோதாவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *