கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.6.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* 13ஆம் தேதிக்குள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் 20ஆம் தேதி முதல் டில்லியில் காலவரையற்ற போராட்டம் – கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அறிவிப்பு.

* மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி விவகாரம்; டில்லி, போபாலில் தேர்தல் ஆணைய அலுவலகம் முற்றுகை: பாஜகவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* அயோத்தி ராமன் கோயில் அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் முறைகேடு: ராமன் கோயில் நன்கொடை நிதியில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், நிதி முறைகேடு குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அயோத்தி பாஜக தலைவர் டாக்டர் ரஜ்னிஷ் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தி இந்து

* காலக்கெடு முடிந்தும் கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள்: ஜூன் 10-ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகள் இயக்ககம் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், நகரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் தங்கள் வளாகத்திலோ அல்லது இணையதளங்களிலோ அத்தகவலை வெளியிடவில்லை.

தி டெலிகிராப்

* சி.பி.எஸ்.இ. மதிப்பெண் உத்தேசமாக கொடுக்கப் பட்டதா? புதிய ‘ஆன்-ஸ்கிரீன்’ திருத்துதல் முறையில் சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவுக்கு ‘ஊகம்’ காரணம் என குற்றச்சாட்டு: புதிய ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) முறையின் கீழ், தெளிவற்ற ஸ்கேன் செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு ஆசிரியர்கள் ‘ஊகத்தை’ (guesswork) பயன்படுத்தியதாக தெரிகிறது; இதனால் பல திறமையான மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக இரண்டு பள்ளி முதல்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி: செயல்பாட்டை விட விளம்பரத்திற்கே பிரதமர் முன்னுரிமை அளித்தார்: காங்கிரஸ் அறிக்கை. உலகளாவிய பொருளாதார தரவரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளதை காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *