கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.2.2026

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அல்வா, முட்டை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் பட்ஜெட்: தெறிக்கவிடும் தி.மு.க.வின் போஸ்டர்கள். ‘கோழி முட்டை’ படத்துடன் பளிச்சிடும் அந்த போஸ்டர்களில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி ‘முட்டை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க. – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணியின்போது ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்தது.

* தெலங்கானா முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ், பி.ஆர்.எஸ், பா.ஜ.க. கட்சிகள் சார்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பிற்படுத்தப் பட்டோருக்கு வாய்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குடியரசுத் தலைவரின் உரைக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளிக்காதது சபையின் விதிகளை மீறிய செயல் மற்றும் “கடுமையான நடைமுறை முறைகேடுகள்” என்று கூறி, காங்கிரஸ் கட்சி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தி இந்து:

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீட்டெடுக்க கேரள சட்டமன்ற தீர்மானம்  நிறைவேற்றியது: புதிய விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் உரிமை அடிப்படையிலான அணுகுமுறை மறைந்துவிட்டது; மாநிலமும் கூடுதலாக ₹3,500 கோடி சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது;

* பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததால், பிரதமரை வர வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டேன் என்கிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.

* அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன் நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. மக்களவைத் தலைவர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா? பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘உண்மைக்கு அஞ்சி, பொய்களில் தஞ்சம் புகுந்தார்’: பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரைக்கு ராகுல் காந்தி பதில். பிரதமர் மோடியின் உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில், “சில கேள்விகளுக்கே இவ்வளவு பதற்றமா? மோடி ஜி, உண்மைக்கு மிகவும் அஞ்சி, பொய்களில் தஞ்சம் புகுந்து விட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *