முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் எழுச்சி நாள் நிகழ்வாக சிறப்புடன் நடைபெற்றது!

2 Min Read

மும்பை, ஜூன் 11- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா திரா விடர் எழுச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது, ஜூன் 6-ஆம் தேதி மாலை 7-00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் சிறப்புடன் தொடங்கியது.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இ.அந்தோணி அனைவரையும் வர வேற்று பேசினார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன் தொடக்க உரையுடன் நெறியாள்கை செய்தார். மும்பை மாநகர திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் அன்பழகன் பொற்கோ, மும்பை புறநகர் மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், கழகப் பொருளாளர் பெரியார் பாலா, மகிழ்ச்சி மகளிர் பேரவை சார்ந்த ந.வளர்மதி, காரை இரவீந் திரன், திருவள்ளுவர் நற்பணி இயக்க ந.இராதாகிருஷ்ணன், ஜெய் பீம் அறக்கட்டளை வனிதா இளங்கோவன், அக்சித் இரவிசந்தி ரன், கே.பி. சண்முகவேல், மனிதநேய சங்கர் திராவிடர், ஆகியோர் கலைஞ ரின் பொது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சிறப்பாக நினைவு கூர்ந்தும் பேசினர்

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி யஷ்வந்த் சவாரே கலந்துகொண்டு பெரியார், அம்பேத்கர், கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பற்றியும் நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் சிறப்பாக தனது உரையில் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினருக்கு கழகத்தின் சார்பில் பயனடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது!

முலூண்ட் ஆ. பாலசுப்பிர மணியம், திராவிடர் கழக தாராவி கிளைத் தலைவர் அய்.செல்வ ராஜ், மூத்த திமுக தலைவர் என்.வி. சண்முகராசன், பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் அ.அறச்செல்வன், திமுக தோழர் பொய்சர் மூர்த்தி, பூ.சு.அழகுராஜா சி.குப்புசாமி, க.அறிவுமதி, பிரேம்குமார், விக்ரம், சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மும்பை திராவிடர் கழகச் செயலா ளர் ஜே. வில்சன் நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *