புதுடில்லி, ஜூன் 10- இந்திய ரயில்வே அகல ரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் அகல ரயில் பாதையில் 99.6 சதவீதம் ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதையில் 2026 மே 31ஆம் தேதி நிலவரப்படி 70,002 கி.மீ. மின்மயமாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் பாதை மின்மயமாக்கல் கடந்த 1925இல் தொடங்கியது. நாட்டின் முதல் மின்சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்பில், மகாராட்டிராவின் மும்பை விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ஹார்பர் இடையே இயக்கப்பட்டது.
ரயில்வே அமைச்சகத்தின் அண்மைத் தகவலின்படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் அகல ரயில்பாதையில் 100 சதவீதம் மின்மயமாக்கலை எட்டியுள்ளன. ராஜஸ்தான், தமிழ்நாடு, அசாம், கருநாடகா, கோவா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 269 கி.மீ. வழித்தடம் மட்டுமே மின்மயமாக்கல் பணியின் கீழ் உள்ளன. இவை தவிர, புதிய பாதைகள் மற்றும் பல வழித்தட திட்டங்கள் அனைத்தும் தற்போது மின்மயமாக்கலுடன் சேர்த்தே அனுமதி அளிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் அகல ரயில் பாதையில் 99.6 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது! ரயில்வே அமைச்சகம் தகவல்
Leave a Comment
