பெண்களுக்கு எதிராக கோவை மாநகரில் 155 குற்ற வழக்குகள் பதிவு! பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சி!

2 Min Read

கோவை, ஜூன் 8– கோவையில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையை ஒழிக்க காவல் துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர். மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் மாநகரில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இவர்கள் தவிர மது விலக்கு, அமலாக்க துறை காவல்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொழில் நகரமான கோவையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக தங்கி உள்ளனர். நகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்றச் சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கல்லூரிப் பகுதி களில் மாணவர்கள் விடுதி மற்றும் அறை எடுத்துத் தங்கி உள்ளனர். அவர்கள் மத்தியில் போதைப்பொருளை ஒழிக்க அடிக்கடி காவல்துறையினர் மாண வர்களின் அறையில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களுடன் வேறு யாரேனும், குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தங்கி உள்ளார்களா? எனவும் பரிசோதிக்கின்றனர். தங்கி இருக்கும் பகுதிகளில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்களும் சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையினரிடம் சிக்கினர்.

மாதத்திற்கு 30 புகார்கள்

எனவே, மாநகரில், அடிக்கடி காவல்துறையினரின் சோதனை, பாதுகாப்புப் பணியை மேம்படுத்தி கைது நடவடிக்கை எடுத்தாலும், கஞ்சா விற்பனை, பெண்கள் மற்றும் சிறுமி களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், கொலை, கொள்ளை குறைந்த பாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது காவல்துறையினரின் மீதான நம்பிக்கையை மக்களிடையே இழக்க செய்துள்ளது. மாநகரில் 5 மாதத்தில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களாக 155 வழக்குகள் பதிவாகி உள்ளது. மாதத்திற்கு 30 புகார்கள் வரை வந்துள்ளன.

தற்போது புதிய த.வெ.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டம் துவங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் அரசும், காவல்துறையும் தனிக்கவனம் செலுத்துவதில் தற்போது வரை சுணக்கம் காட்டி வருவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் சிறுமிகள் மீதான ‘போக்சோ’ வழக்கும் அதிகளவில் பதிவாகி வருகிறது. கோவை மாநகரில் 183 போதைப்பொருள் வழக்குகளில் 309 கிலோ கஞ்சா, 780 மில்லி கிராம் எம்டி எம்ஏபோதைப் பொருள், 2,113 போதை மாத்திரை. 264 கிராம் மெத்தாம்பிட்ட மின் போதைப் பொருள் மற்றும் 43 எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகர காவல்துறை யினர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை தரப்பில்…

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில், கடந்த 5 மாதத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 235 குற்றச்சம்பவங்கள் பதிவாகி இருந்தது. இது இந்த ஆண்டு குறைந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *