புதுடில்லி, ஜூன் 8- ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள் மறுமதிப்பீட்டுப் பணிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் கண் டறியப்பட்டதை அடுத்து, அதற்குப் பயன் படுத்தப்பட்ட தனியார் இணையதளம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் ரகசியத் தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில், அனைத்து விவரங்களும் தற்போது சிபிஎஸ்இ-இன் சொந்த சர்வர்களுக்கு மாற்றப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மதிப்பெண் குளறுபடிகளும், குவிந்த விண்ணப்பங்களும்!
கடந்த மே 13ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. சுமார் 1 கோடி விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் பணிக்காக ‘கோயம்ட் எடு டெக்’ (Coeumt Edu Tech) நிறுவனத்தின் ‘ஆன்மார்க்’ (OnMark) என்ற இணையதளம் பயன் படுத்தப்பட்டது.
முடிவுகள் வெளியான பிறகு மதிப்பெண்களில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின:
மொத்த விண்ணப்பங் கள்: 70,433 மதிப்பெண் சரிபார்ப்பிற்கு: 7,314 விண்ணப்பங்கள் மறு மதிப்பீட்டிற்கு: 63,119 விண்ணப்பங்கள்
அய்அய்டி வல்லுநர்களின் ஆலோசனை & சைபர் தாக்குதல் புகார்
கோயம்ட் நிறுவனத் தின் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை அறிந்த சிபிஎஸ்இ, உடனடியாக அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது.
அய்அய்டி கான்பூர் மற்றும் அய்அய்டி மெட்ராஸ் ஆகிய கல்வி நிறுவனங்களின் வல்லுநர் குழு அளித்த ஆலோசனையின்படி, மாணவர்களின் ரகசியத் தரவுகள் அனைத்தும் சிபிஎஸ்இ-இன் சொந்தக் கட்டுப்பாட்டில் உள்ள சர்வர்களுக்கு பாது காப்பாக மாற்றப்பட் டுள்ளன.
முன்னதாக, தனது இணையதள சேவை மீது திட்டமிட்ட சைபர் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக டில்லி காவல் துறையினரின் சிறப்புப் பிரிவில் சிபிஎஸ்இ புகார் அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் அய்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், வருகிற ஜூன் 7ஆம் தேதி வரை மறுமதிப்பீட்டிற்கு விண் ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை!
மறுமதிப்பீட்டுப் பணிகள் இனிமேல் சிபிஎஸ்இ-இன் நேரடி கண்காணிப்பில் உள்ள புதிய போர்டல் மூலம் அடுத்த வாரம் தொடங்கப் பட உள்ளது.
மேலும், இந்த ஒட்டு மொத்த விவகாரத்தையும் கண்காணித்து ஆய்வு செய்ய, ஒன்றிய கல்வி அமைச்சரின் உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
