• பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழகத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், சொக்க நாதபுரம் சி.செகநாதன் 09.06.2026 அன்று 85 ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக அவரது வாழ்விணையர் செ.தமிழரசி, மகன்கள் செ.நல்லத்தம்பி, செ.இளையராசா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். வாழ்த்துகள்! நன்றி!!

• வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியனின் பெரியம்மா மறைந்த ப. புஷ்பவேணியின் 79ஆவது பிறந்தநாளையொட்டி (8.6.2026) கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!!
