இரவாஞ்சேரி சுயமரியாதைச் சுடரொளி அரங்கராசன் நினைவு நாள் பொதுக் கூட்டம்

3 Min Read

இரவாஞ்சேரி, ஜூன் 8– இரவாஞ்சேரி சுயமரியாதைச் சுடரொளி  மானமிகு மாஸ்டர் (என்கிற) அரங்கராசன், அவர்களின் 40 ம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

03-06-2026 அன்று மாலை 6.00 மணியளவில்  திருவாரூர் மாவட்டம் இரவாஞ்சேரி கடைவீதியில் சுயமரியாதை சுடரொளி மானமிகு மாஸ்டர் என்கிற அரங்கராசன் அவர்களின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு சிறப்பாக நடத்தப்பட்டது.  திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி தலைமை வகித்து உரையாற்றினார். அரங்க.ராசா அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வி.மோகன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், திருவாரூர் நகர துணைத் தலைவர் சௌ. சுரேஷ், நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராஜ் ஓவியர் தி.சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். நிகழ்வின் தொடக்கமாக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் வே.அறிவழகன், ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.

கழகச் சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரை யாற்றுகையில், மறைந்த மாஸ்டர் அவர்கள் இந்த  இரவாஞ்சேரி பகுதியில் சரித்திரம் படைத்தவர் சுற்றி சுழன்று சுழன்று  இயக்கப் பணி செய்தவர்.   அவர் மறைந்து 40 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அவரைப் பற்றி பேசுகிறோம் என்ன காரணம் என்றால் அவர் செய்த தியாகம் அர்ப்பணிப்பு.

இரட்டிப்பு மகிழ்ச்சி

குடும்பத்தினர் இன்று மாஸ்டர் அவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது பெறும் மகிழ்ச்சி.

அரங்க.ராசா, அரங்க.சுரேந்தர், அதேபோல்  ஆஸ்திரேலியா நாட்டில்  அங்கேயும் நம் இயக்கத்தை எடுத்துச் செல்கின்ற அரங்க.மூர்த்தி, ஆகியோர் களின் பணியை பார்க்கும் போது மாஸ்டர் விட்டு சென்ற பணியை மகன் கள் தொடர்வது இரட்டிப்பு மகிழ்ச்சி.

தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், செய்த தியாகங்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 93 வயதிலும் சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் இன்றைய சூழ்நிலையில் அரசியல் மாற்றம் வெறும் கேலிக்கூத்தாக உள்ளது எனவும்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 -ஆம் ஆண்டு பிறந்த நாள் திராவிடர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழர் தலைவர் அவர்கள் நான்கு மாநிலங்களை உள்ளடக்கி 103 கூட்டங்களை பிரச்சாரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் எதற்காகவும் நம் தோழர்கள் தயாராகி விட்டார்கள் என்று பேசினார்.

மாலை நேரப் பொழுதில் கூட்டம் துவங்குவதற்கு முன் உலகத்தலைவர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட புதிய  பொறுப்பாளர்களுக்கு பொன் னாடை போத்தி வாழ்த்துக்கள் தெரிவிக் கப்பட்டது. மாவட்ட செயலாளர் கோ.பிளாட்டோ நிகழ்வினை ஒருங்கி ணைத்தார்.

மாவட்ட துணைத் தலைவர் ந.ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.கரிகாலன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெ.மண் டோதரி, குடவாசல் ஒன்றிய செயலாளர் க.அசோக்ராஜ், ஒன்றிய துணைத் தலைவர்  சி.அம்பேத்கர், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா. தன்ராஜ், நன்னிலம் நகர தலைவர் தன.சஞ்சீவி, நன்னிலம் நகர செயலாளர் ஆ.சரவணன், திருமருகல் ஒன்றிய தலைவர் இராச.முருகையன்,

இரவாஞ்சேரி கிளை கழக தோழர்கள்

நா.பழனிச்சாமி, பன்னீர்செல்வம் வி.முருகையன், எம்.முகமது ராப், சு.முருகையன். ஆசிரியர் சதீஷ், அல்கூர் ஜமா,  மகளிர் அணி  பேபி, விசாலாட்சி, ராணி, வாணி, சாந்தி,  பெரியார் பிஞ்சு  தமிழினியன், தமிழமுதன், தமிழின்பன்.  மற்றும் கழக தோழர்கள்  பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக  இரவாஞ்சேரி கிளைக் கழகப் பொறுப்பாளர் தி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். 9.40 மணிக்கு நிகழ்ச்சி முடிவடைந்தது கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்துள்ளார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *