திராவிடர் எழுச்சி நாள் – முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் (மேலூர் – 7.6.2026)

திராவிடர் கழகம்

மேலூர் சுந்தரி டவர் அருகில் திராவிடர் எழுச்சி நாள் – முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் லெ. வீரமணி தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாக் குழுவின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. உடன்: கே. தமிழரசன் (திமுக), முகமது யாசின் (திமுக), க.பெரியசாமி (மேலூர் நகர செயலாளர்), இரா.குணசேகரன் (கழக ஒருங்கிணைப்பாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்), தே.எடிசன்ராசா (தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர்), வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.பாக்யலெட்சுமி (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்) மற்றும் தோழர்கள் உள்ளனர்.

 

ல.மு. அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா வாழ்க்கை இணை ஏற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

திராவிடர் கழகம்

 

சுப. முருகானந்தம் – தி. லதா இணையரின் மகன் ல.மு. அகிலாராஜன், அ.ரகுமான் – ர. ஜெமிலா இணையரின் மகள் ர. முஜிபா ஃபர்ஜானா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்: உரத்தநாடு இரா.குணசேகரன், திண்டுக்கல் வீரபாண்டியன், மதுரை முருகானந்தம், முனிசாமி, வே. செல்வம், வா.நேரு, பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (மதுரை, 7.6.2026).

திராவிடர் கழகம்

மதுரை பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி – ராஜேஷ்வரி, ஆகியோரின் மகள் பேராசிரியர் இரா. சுமதி, பேரன் வெங்கட்ரமணா, குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். 6.9.2025 வரை வழங்கிய நன்கொடை ரூ.3 லட்சம் ஆக மொத்தம் ரூ. 4 லட்சம் வழங்கியுள்ளனர். மேலும் இது வளரும் எனத் தெரிவித்தனர். உடன்: தஞ்சை மாவட்ட கழக காப்பாளர் அய்யனார் மற்றும் இராமசாமி குடும்பத்தினர் (மதுரை, 7.6.2026)

திராவிடர் கழகம்

காவல் துறை உயர் அதிகாரியாக (D.I.G.) பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெயச்சந்திரன் – சூரியா இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மேலூரில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சிறிது நேரம் உரையாடினார். (மதுரை மேலூர் – 7.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *