மயிலாடுதுறை, ஜூன் 7– மயிலாடுதுறையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103 வது பிறந்தநாள் – அன்னை நாகம்மையார் 94ஆவது நினைவு நாள் கருத்தரங்கம் 5.6.2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை வருவாய்த்துறை அலுவலர் சங்க (R.O.A) அரங்கத்தில் நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழக உயர்மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையேற்க மயிலாடு துறை நகர கழக தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை அனைவரையும் வரவேற்றார். குத்தாலம் ஒன்றிய கழக தலைவர் சா.முருகையன் அன்னை நாகம்மையார் படத்தினையும், குத்தாலம் நகர கழக தலைவர் சா.ஜெக தீசன் கலைஞர் படத்தையும் திறந்து வைத்தனர். ‘மானமிகு சுயமரியாதைக்காரர் – கலைஞர்’ எனும் தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் ஞான.வள்ளுவனும், ‘வைக்கம் போராட்டத்தில் அன்னை நாகம்மையார்’ எனும் தலைப்பில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன் அவர்களும் சிறப்புரையாற்றினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க செல்வராஜ் நன்றி கூறினார். எழுத்தாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார். நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கு.இளமாறன், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலை வர் ச.சந்திரசேகரன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பூ.பாண்டுரங்கன், வைத்தீஸ்வரன்கோயில் கழக தலைவர் முத்தையன், நகர மன்ற உறுப்பினர் தெய்வநாயகம், திமுக தோழர்கள் முத்துக்கண்ணன், கொக்கூர் கலைக்குமார், பகுத்தறிவாளர் கழக தோழர்கள், சே.ஆராமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஓய்வு) மகாலிங்கம், பெற்ற வட்டாட்சியர் (ஓய்வு) ராம கிருஷ்ணன், என்.எஸ்.மாசேதுங், பி.ராஜேந்திரன், கே.ஜி.நாகராஜ், தெ.மகேஷ், நா.இளையராஜா, சாமி.கணேசன், கவிஞர் சிவக்குமார் மற்றும் தோழர் கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர். அனைவருக்கும் தேநீர் விருந்தளிக்கப்பட்பது.
