நமது இனமானப் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களது (அடுத்த) தம்பியான பேராசிரியர் மானமிகு க. திருமாறன் (வயது 102)அவர்கள் நேற்று (6.6.2026) சென்னை பெரும்பாக்கத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
வாழ்நாள் முழுதும் சீரிய சுயமரியாதை – பகுத்தறிவுக் கொள்கை வீரராகவே திகழ்ந்தவர். விருதுநகரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்று அங்கே தங்கியிருந்தவர். பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து மகிழ்வார்.
தந்தை பெரியார் அவர்களிடத்திலும், நம்மீதும் அன்பும், மதிப்பும் கொண்டவர்.
மிகுந்த தன்னடக்கத்துடன் பழகுவார்.
சில ஆண்டுகளுக்குமுன் அவரும், அவரது வாழ்விணையரும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு வந்ததோடு, பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றவர்.
சிறிது காலம் உடல் நிலை தளர்ந்த நிலையில் முடிவெய்தினார்.
அவரது குடும்பத்தினர்கள் குறிப்பாக, திருமதி பத்மா திருமாறன், வள்ளுவர், மகள்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் நமது ஆறுதல்.
மறைந்த பெரு மகனாருக்கு நமது வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.6.2026
முகவரி:
பிளாட் எண்: H-106, (முதல் மாடி) H பிளாக்
போலினெனி ஹில்சைட்டு ஃபேஸ்–2
பெரும்பாக்கம் சாலை, நூக்கம்பாளையம்,
சித்தாலப்பாக்கம் (அஞ்சல்)
சென்னை – 600 131
தொடர்புக்கு: 9442717426/9442677840
