தமிழ்நாட்டில் பிறந்து, இளம் வயதிலேயே எழுத்தாற்றல், எழுத்தார்வம் கொண்டு உயர்ந்த பெருமதிப்பிற்குரிய பிரபல இலக்கியச் செம்மல் ஜே.எம். சாலி (எ) ஜமாலுதீன் முகம்மது சாலி (வயது 87) அவர்கள் பழைய தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்து தமது 25ஆம் வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர்.
‘ஆனந்த விகடன்’, சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ போன்ற ஏடுகளில் எழுத்துப் பணி செய்து தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்த பெருந்தகையாளர்!
தமிழ்நாடு அரசு, சிங்கப்பூர் அரசு மற்றும் பல தனித் தொண்டற அமைப்புகள், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஆகியன சார்பாகவும் விருதுகள் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டவர். பல தரப்பினரின் பேரன்பினையும், மரியாதையையும் பெற்ற அவர் நேற்றுமுன்தினம் (15.5.2026) காலமானார் என்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; தமிழ் இலக்கிய உலகத்திற்கும்கூட பேரிழப்பாகும்!
பழக இனிய சுபாவம் உள்ள அடக்கமான பண்பாளர்.
அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய உலகத்திற்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.5.2026
