இலங்கை: முதியோர் இல்லத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு உரிமையாளர் கைது

2 Min Read

கொழும்பு, ஜூன் 5– இலங்கையின் மேற்கு மாகாணங்களில் ஒன்றாக களுத்துறை உள்ளது. இங்கு கொழும்பில் இருந்து தென்கிழக்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்திருக்கும் ‘மாவ்பிய செவன’ என்ற தனியார் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் 71 முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்கள், நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் 10 பேர் என மொத்தம் 81 பேர் தங்கியிருந்தனர்.

எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு

முதியோர் இல்லத்தில் இருந்த சமையல் அறையில் இரவு உணவுக்காக மாலையில் சமைக்கப்பட்டு கொண்டிருந்தது. அப் போது எதிர்பாராதவி தமாக சமையல் அறை யில் இருந்து கியாஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டது. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் சிலிண்டரில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

தொடர்ந்து முதியோர் இல்லம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த அறைக்கு தீ வேகமாக பரவியது. தீ பரவியதை தொடர்ந்து அங்கு இருந்த நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

அவர்களில் ஒருசிலர் முதியவர்களின் உயிரை காப்பாற்றும் எண் ணத்துடன் சக்கர நாற் காலியில் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் தீயின் கோர தாண்டவம் மற்றும் அதீத அனல் காரணமாக அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் வேகமாக விரைந்தனர்.

தொடர்ந்து முதியோர் இல்லத்தில் பரவியிருந்த தீயை தண்ணீரை கொண்டு பீய்ச்சியடித்து அணைக்க முயன்றனர். மறுபுறம் தீ விபத்தில் சிக்கிய 51முதியவர்களை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 10 முதியவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத் துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 முதியவர்கள் உயிரிழந் தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியோர் இல்லத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *