பாகிஸ்தானில் வெப்ப அலைக்கு 10 பேர் உயிரிழப்பு

1 Min Read

கராச்சி, மே 6- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பஅலை அதிகமாக உள்ளது. இந்த வெப்ப அலையானது கால நிலை மாற்றத்துடன் தொடர் புடைய தெற்காசியா முழுவதும் அதிகரித்து வரும் அதிதீவிர வெப்ப நிலைகளின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதி யாகும்.

இந்நிலையில் கராச்சியில் நேற்று முன்தினம் (4.5.2026) வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்,நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டன.

வெப்பதாக்கத்தின் அறிகுறிகளுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த அய்ந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் வானிலை ஆய்வு மய்யத்தின் தகவலின்படி நேற்று முன்தினம் கராச்சியில் 44 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் பதிவான அதிகபட்ச வெப்பமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *