
ஆத்தூர் தந்தை பெரியார் அறக்கட்டளை தலைவர் ஆர்.ஆறுமுகம் அவர்களின் துணைவியார் ஆ.ராஜம் (வயது 79) வயது முதிர்ச்சி காரண மாக 3.6.2026 அன்று மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம் ஆத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (4.6.2026) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பகல் 1 மணியளவில் எந்த மூடச் சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது.
மகன். ஆ.ஆராமுதன், ஆ.கயல்விழி, ஆ. பன்னீர் செல்வம் துணைவியர் பி.சுமித்ரா, பேரன் பி.அன்பு செல்லம் ஆகியோருக்கு கழகத் தோழர்கள் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து, இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
