புதுடில்லி, ஜூன்.3- சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை டிஜிட்டல் முறையில் (ஓ.எஸ்.எம்.முறை) நடப்பாண்டில் அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று தேர்வு முடிவு வெளியானது. அதில் பல மாணவ- மாணவிகளுக்கு குறைந்த மதிப்பெண் வந்த சூழ்நிலையில் சி.பி.எஸ்.இ. தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக அதன் தலைவராக இருந்த ராகுல்சிங், செயலாளர் பொறுப்பில் இருந்த ஹூமான்சு குப்தாவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக அதிகாரிகள் மாற்றப்பட்ட நடவடிக்கை வெறும் ‘கண்துடைப்பு நாடக நடவடிக்கை” என்றும், ‘உண்மையை மூடிமறைக்கும் முயற்சி என்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சி.பி.எஸ்.இ. தலைவர் மாற்றப்பட்டார், செயலாளர் மாற்றப்பட்டார், ஒரே நபர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் உண்மையான பொறுப்புக்குரிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உடனடியாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்து, நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
த.வெ.க. அரசின் அமைச்சரவை முதல் கூட்டம்
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை நடக்கிறது
சென்னை, ஜூன் 4 த.வெ.க அரசின் முதலமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை நடக்கிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க) வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், புதிய அரசின் முதல் சட்டபேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
த.வெ.க அரசின் இந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் உரையாற்ற இருக்கிறார். அவரது உரையைத் தொடர்ந்து, அடுத்த 3 நாட்களுக்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் சட்டசபையில் நடைபெறும். வழக்கமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது மரபாகும். அதன்படி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள தொழில் முதலீடுகள், கொள்கை ரீதியான முக்கிய முடிவுகள் மற்றும் மதுபானக் கடைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
