அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கான கடுமையான விசா விதிமுறைகளால் இந்தியர்கள் பெருமளவு பாதிப்பு

3 Min Read

வாசிங்டன், ஜூலை.19- வெளி நாட்டு மாணவர்கள், ஊடகத்தினர், பார்வையாளர்களுக்கான விசா விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கி உள்ளது. இது இந்திய மாணவர்களை கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

வெளிநாட்டினருக்கு சவால்

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், வெளி நாட்டினர் அங்கு தங்கியிருப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.

ஏனெனில் வெளிநாட்டின ருக்கான விசா விதிமுறைகளை டிரம்ப் அரசு தொடர்ந்து கடுமை யாக்கி வருகிறது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது வெளி நாட்டு மாணவர்கள், பரிமாற்று பார்வையாளர்கள், ஊடகத்தினர் ஆகியோருக்கான விசா விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி இருக்கிறது. பரிமாற்று பார்வையாளர்களை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வுக்கு படிப்பு, ஆய்வு, கலாச்சாரம் சார்ந்த பரிமாற்றத் திட்டங்களில் பயன்பெறுவோர் ஆவர்.

உள்துறை அறிவிப்பு

அமெரிக்காவின் விசா பட் டியலில் வெளிநாட்டு மாண வர்கள், கலாசாரப் பார்வையாளர்கள், ஊடகத்தினர் முறையே எப், ஜே.அய் என வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் இருப்ப வர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கி அமெரிக்க உள் துறை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன்படி, குடியேறாதோர் விசா வைத்திருக்கும் மேற்படி பட்டியலில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். இதில் மாணவர்களை பொறுத்தவரை, பட்டப்படிப்பு முடிந்த உடனே கல்லூரியை விட்டு வெளியேறவோ அல் லது இடமாற்றம் செய்யவோ மற்றும் விசா நிலையை மாற்றிக் கொள்ளவோ வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை 60 நாட்களிலிருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு  ஊடகத்தினர்

தற்போது, மாணவர் விசாக்கள் அவர்களின் படிப்புகாலம் முழுவதும் நீடிக்க அனுமதிக்கப்படு கின்றன. அனுமதில் நீடிக்க படிப்பு முடிந்த பிறகும் விருப்பத் தேர்வான செய்முறைப் பயிற்சி மூலம் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கவும் அனு மதிக்கப்படுகின்றன. ஆனால் இனி அது ரத்து செய்யப்படுகிறது.

பன்னாட்டு ஊடகத்தினரை பொறுத்த வரை, அதிகபட்சம் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். அதுவும் சீனர் களுக்கு இது வெறும் 90 நாட்கள் ஆகும். தற்போது அமெரிக்காவில் வெளிநாட்டு ஊடகத்தினருக்கு என்று குறித்த கால வரம்பு எதுவும் இல்லை அவர்கள் ஆண்டுக் கணக்கில் கூட தங்கியிருக்க முடியும். ஆனால் புதிய விதிமுறைகளின்படி, அவர்களுக்கும் கால வரையறை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

நிரந்தரமாக படிப்பு

குடியேறாத மாணவர்கள் (எப்விசாக்கள்)மற்றும் பரிமாற் அப் பார்வையாளர்கள் (ஜே விசாக்கள்) தங்களின் குறிப் பிட்ட கல்வித் திட்டத்தின் கால அளவுக்கு ஏற்பவே அனு மதிக்கப்படுவார்கள். அது நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உள்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், ‘அமெரிக்காவில் பல தசாப் தங்களாக வெளிநாட்டு மாணவர்கள் காலவரையின்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் இதன்மூலம், அமெரிக்காவை விட்டு  வெளியேறுவதை தவிர்ப்பதற்காக, ஆயிரக்கணக்கானோர்  நிரந்தரமாகப் படிப்புகளில் சேர்ந்து நமது. குடியேற்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

தற்போது திருத்தப்பட்ட இந்த வெளிநாட்டு விதிகளின் மூலம்  மாணவர்கள் தங்கள் முதன்மை நோக்கமான படிப்பை முடித்து தாயகம் திரும்புவதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என்றும் உள்துறை செயலாளர் மார்க்வெயின் முல்லின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கை மூலம் பன்னாட்டு மாண வர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதுவும் இந்தியாவை சேர்ந்த ஏராள மான மாணவர்கள் இதன் மூலம் பாதிக் கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

ஏனெனில் அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர். கடந்த ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024-2025 கல்வியாண்டில் இந்தியாவைச் சேர்ந்த 3,63,019 மாணவர்கள் அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *