சி.ஆர். ஆச்சாரியாரின் ஒப்புதல் வாக்குமூலம்!

1 Min Read

‘விடுதலை’யின் பிரச்சாரத்தொண்டால் வெகுவிரைவில் மாற்றுக் கொள்கையுடைய வர்களையும் விழிப்புறச் செய்வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதில் வெளிவரும் புராண சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள். ஆஸ்திகப் பிரச்சாரர்களே அவ்வாராய்ச்சியிற்கண்ட உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. உண்மையான பகுத்தறிவுப் பிரச்சாரத் தொண்டுக்கே உயர்வு கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது.

மதுரையில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார். (ராஜாஜி) திராவிடத் தலைவர் பெரியாரைக் குறிப்பிட்டு அவர்கள் இருவரிடையேயும். பழங்காலமிருந்தே நிலவிவரும் சிறப்பான நட்பும், பெரியார் அவர்கள் நாட்டுப் பணியில் தீவிர சிரத்தையுடன் முந்தைய நாளிலிருந்தே பாடுபடுவதையும் புகழ்ந்து கூறியிருப்பதுடன், பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக்கொண்ட வகையில் கோயில்களின் புனிதத்தன்மை குறைந்திருப்பதையும். ராமாயணம் ஓர் கட்டுக்கதையென்றே சொல்ல வேண்டுமென்றும், ‘தர்மம்’ என்பதே மனச்சான்றுக்குச் சரியெனப்படுவதுதானென்றும் அக்காலத்தில் மக்களிடம் குடிகொண்டிருந் ஒழுக்கக் குறைபாடுகளைப் பற்றி கவிவாணரால் சித்திரிக்கப்பட்டதுதான் ராமாயணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

– ‘விடுதலை’ – 03.03.1953

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *