புதுடில்லி, மே 31 நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மக் களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மருத்துவ இளநிலைப் படிப் புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ஆம் தேதி நடை பெற்றது. வினாத்தாள் முன்கூட் டியே கசிந்ததால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத் தாள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதில் சர்ச்சை எழுந்திருக்கிறது. உத்தரப் பிரதேசம், பீகாரில் அண்மையில் நடை பெற்ற கணினி வழியிலான எஸ்எஸ்சி தேர்வின்போது சர்வர் கோளாறால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (30.5.2026) நடைபெற்ற கணினி வழியிலான கியூட் நுழைவுத் தேர்வின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட் டது. இதனால் சுமார் 2 மணி நேரம் காலதாமதம் ஏற் பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளின் குளறுபடியால் சுமார் ஒரு கோடி மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு தேர்வுகூட நேர்மையாக நடத்தப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியை, ‘உலக குரு’ என்று அழைக் கிறார்கள். ஆனால் அவர் ஒட்டு மொத்த கல்வி முறையையும் சீர்குலைத்து உள்ளார். நீங் கள் (மோடி) ஒரு தலைமுறை யின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த தலைமுறை நீங்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க வைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
