உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்! அரசு உதவித்தொகையுடன் இலவச விடுதி வசதி உண்டு!

1 Min Read

சென்னை, மே 30- சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வரும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விரிவான விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

கல்வி உதவித்தொகை

சேர்க்கை பெறும் மாணவர்களில், தகுதி மற்றும் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 15 மாணவர்களுக்கு மாதம்மாதம் ரூ. 2,000 வீதம் தமிழ்நாடு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விடுதி வசதி: மாணவர் மற்றும் மாணவியருக்குத் தனித்தனியாகக் கட்டணமில்லா தங்கும் விடுதி வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்படும்.

இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு நேரில் சென்றும் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களுடன், இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் சான்றொப்பமிடப்பட்ட நகல்களை இணைத்து, நேரில் அல்லது அஞ்சல் மூலமாகப் பின்வரும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை படிப்பு: வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதுகலை தமிழ் (2 ஆண்டு) படிப்பு: வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113.

தொலைபேசி எண்: 044-22542992

இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் மேற்கண்ட முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *