ஆசிரியர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1 Min Read

கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து மே-31இல் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் 

திருவாரூர், மே 29- கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து மே-31 திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று கழகத் தோழர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

தமிழ்நாடு

கொரடாச்சேரி ஒன்றியம்

தேவர்கண்டநல்லூர், மூலங்குடி,  பருத்தியூர், விடையபுரம், கண்கொடுத்த வனிதம், கொரடாச்சேரி.

குடவாசல் ஒன்றியம்

கீழப்பாளையூர், மூலங்குடி, வேப்பூர், மஞ்சக்குடி, நரசிங்க பேட்டை, புதுக்குடி, சிப்பனாம்பேட்டை.

நன்னிலம் ஒன்றியம்: நன்னிலம்.

திருவாரூர் ஒன்றியம்

சோழங்கநல்லூர் குறும்பேறி சாலை, சோழங்கநல்லூர், நாகூர் சாலை, சோழங்கநல்லூர், பெரியார் தெரு (முழுவதும்), ஓடாச்சேரி, வட ஒடாசேரி, திருவாதிரைமங்கலம், சூரனூர்.

மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று திராவிடர் கழகத்தோழர்கள் மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், பொதுமக்களை சந்தித்து  பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி அடையச்செய்ய அழைப்பு விடுத்தனர்.

மக்களும் மகிழ்வுடன் வரவேற்று 93 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உறுதியாக பெருந்திரளாக பங்கேற்போம் என உறுதி அளித்தனர்.

பொதுமக்களை சந்திக்கும்
சுற்றுப்பயணத்தில் பங்கேற்றோர்:

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, மாவட்ட துணைத் தலைவர் ந.ஜெயராமன்,  மாவட்ட துணைச் செயலாளர் ந.கரிகாலன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. இரவிக்குமார். திருவாரூர் ஒன்றியத் தலைவர் கா.கவுதமன். ஆகியோர் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *