‘நீட்’ மறுதேர்வு வினாத்தாள்களை விமானப்படை விமானங்களில் கொண்டு செல்ல ஏற்பாடு? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடத்த கூட்டத்தில் ஆலோசனை

2 Min Read

புதுடில்லி, மே 29 நீட் மறுதேர்வு வினாத்தாள்களை இந்திய விமானப்படையின் விமானங்களில் கொண்டு செல்வது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்கிறது.

மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3ஆம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த நிலையில், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக கடந்த 7ஆம் தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

‘நீட்’ மறு தேர்வு

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஅய் வழக்குப் பதிவு செய்து 13 பேரை கைது செய்துள்ளது.  இந்நிலையில், நீட் மறுதேர்வினை எவ்வித குறைபாடுகளுமின்றி நடத்துவதை உறுதி செய்யும் வகையில், வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்து வருகிறது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று (28.5.2026) நடந்த உயர்மட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கூட் டத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் மற்றும் கல்வி அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு வினாத்தாள்களை கொண்டு செல்ல விமானப்படை விமானங்களை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அமைச்சர்களும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, பிரதமர் மோடியின் இறுதி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த யோசனை அவரிடம் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், தேர்வு நடைமுறைகள் தொடர்பான ஒவ்வொரு விவரமும் அவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்துவது தொடர்பான அரசின் உத்தரவாதங்கள் பற்றி விளக்கம் அளிக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வி செயலர் வினீத் ஜோஷி, தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் மற்றும் சிபிஅய் இயக்குநர் பிரவீன் ஆகியோர் இன்று ஆஜராக நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *