நார்வே பத்திரிகையாளர் கேள்வி: நழுவிச் சென்ற நரேந்திர மோடி

3 Min Read

ஒஸ்லோ, மே 21  நார்வேயில் பத்திரிகையாளர் கேள்விகளை எதிர்கொள்ளாமல் பிரதமர் மோடி நழுவிச் சென்றுள்ளார். இச்செயலுக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பும் விமர்ச னங்களும் எழுந்துள்ளன.

6 நாள் வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ள மோடி நார்வே சென்றுள்ளார். மோடியும், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரும் தங்களது கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர் (டெலிப் ராம்ப்டர் இருந்தது) .

அப்போது ‘டாக்ஸாவிசென்’ (Dagsavisen) நாளிதழின் கட்டுரை யாளரான ஹெல் லிங் (Helle Lyng), ‘‘பிரதமர் மோடி அவர்களே, உலகின் மிகச் சுதந்திரமான ஊடகங்களிடமிருந்து சில கேள்விகளை நீங்கள் ஏன் எதிர்கொள்ளக் கூடாது?’’ என்று சத்தமாகக் கேட்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கா மல் நார்வே பிரதமர் ஸ்டோருடன் மோடி, நழுவி நடந்து சென்றார். பின்னர் நார்வே பிரதமர் மட்டும் திரும்பி வந்து செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

‘‘அதிகாரத்தில் உள்ளவர்க ளைக் கேள்வி கேட்பது எங்கள் கடமை. மோடி ஆட்சியில் இந்தியா வில் நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, நார்டிக் நாடுகளின் (Nordic countries) நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர் என்று அவர் நினைக்கிறாரா என்பதைத்தான் நான் கேட்க விரும்பினேன்’’ என தான் என்ன கேள்வி கேட்க விரும்பினேன் என்பதையும் ஹெல் லிங் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறி யீட்டில் 180 நாடுகளில் நார்வே முதலி டத்தில் உள்ளது. இந்தியா 157 ஆவது இடத்தில் உள்ளது என்பதையும் ஹெல் லிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பிறகு தனது பிரதமர் பதவி காலத்தில் ஒருமுறைகூட முறையான பத்திரி கையாளர் சந்திப்பை நடத்தியிராத மோடியின் அணுகுமுறை குறித்து பன்னாட்டளவில் மிகக்கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய தூதரகம் விளக்கம்

ஹெல் லிங் பதிவிட்ட அந்த காணொலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் மீதும் பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்குதல் பற்றியும் கடும் விமர்ச னங்கள் எழுந்தன. இந்நிலையில் நார்வேயில் உள்ள இந்திய தூதரகம் ஹெல் லிங் பதிவை ‘எக்ஸ்’ தளத்தில் டேக் செய்து, இரவு 9.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரச்சினையை சமாளித்துள்ளது.

கேள்விகளால் வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்

இந்திய தூதரக அழைப்பின்படி இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஹெல் லிங் கலந்து கொண்டார். “நாம் நமது (இரு நாட்டு) கூட்டாண்மையை வலுப்படுத்தும்போது, நாங்கள் (நார்வே) உங்களை ஏன் நம்ப வேண்டும்? உங்கள் (இந்தியா) நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்த முயற்சிப்பீர்கள் என்று உங்களால் உறுதி யளிக்க முடியுமா? மேலும், எதிர்காலத்தில் எப்போதாவது இந்தியப் பத்திரிகைகளின் விமர்சன ரீதியான கேள்விகளைப் பிரதமர் எதிர்கொள்ளத் தொடங்குவாரா? என கேள்விகளைத் தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அதிகாரி சிபி ஜார்ஜ் கேள்வியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தம் இல்லாமல் கோவிட் நெருக்கடியை மோடி அரசு கையாண்ட விதம், யோகா தோன்றிய இடம் இந்தியா என பேசிவிட்டு பத்திரிகையாளரை மறு கேள்வி கேட்கவிடவில்லை.

“மனித உரிமை மீறல்கள் இருந்தபோதிலும் நாம் ஏன் இந்தியாவை நம்ப வேண்டும் என்பது குறித்தும், இந்த வருகை குறித்தும் எனது சக ஊழியரும் நானும் கேள்விகளை எழுப்பினோம். மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய அதிகாரியை பேச வைக்க நான் பலமுறை முயன்றேன், ஆனால் என்னால் முடியவில்லை. (இந்திய அதிகாரிகள்) அதற்குப் பலதிலளிக்கவில்லை’’ என்பதையும் ஹெல் லிங் தனது சமூக ஊடகத்தில் அம்ப லப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஹெல் லிங் வெளிநாட்டு உளவுத்துறை அனுப்பிய ஏஜென்ட் என சங்பரி வார் மற்றும் பாஜகவினர் சமூக ஊடகத்தில் அவர் மீது அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *