சேந்தநாடு வருகைதரும் தமிழர் தலைவருக்கு
எழுச்சிமிகு வரவேற்பு! விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு
விழுப்புரம், மே 27- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் சே.வா.கோபன்னா தலைமையில் உற்சாக மாக நடைபெற்றது.
நகர செயலாளர் நந்த குமார் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், காப்பாளர் கொ.பூங்கான், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு,மாவட்ட துணைச்செயலாளர் இரமேசு, மாவட்ட ப.க.தலைவர் துரை.திருநாவுக்கரசு, மாவட்ட ப.க.துணைத்தலைவர் சுடரொளிசுந்தரம், விழுப்புரம் நகர தலைவர் இராசேந்திரன், விழுப்புரம் பழனிவேலு, கவுதமன், வளவனூர்சு.மாறன், வல்லம் ஒன்றிய அமைப்பாளர் க.அறிவுடைநம்பி,கோலியனூர் ஒன்றிய அமைப்பாளர் இராதா மணாளன், கண்டாச்சிபுரம் நகர தலைவர் நாகராசன், செயலாளர் சிவராமன், சென்னகுளம் தண்டபாணி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அருந்தொண்டினையும்,கழகப் பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய களப்பணி களையும் எடுத்துரைத்து கருத்துரை யாற்றினார்கள்.
நிறைவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் மகள் மணவிழாவை நடத்தி வைக்க வருகைதரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
ஒன்றியங்கள் தோறும் கழக கொள்கைகள் விளக்க தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந் தாக்கள் சேர்த்து ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட இளைஞரணி தலைவர்: கவுதமன்
செயலாளர்: பணிராஜ்
மாவட்ட மாணவர்கழகம்
தலைவர்: ஆர்.சரன்ராஜ்
செயலாளர் கவிகேசுவரன்
