காத்மாண்டு, மே 25- அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து வகையான புதிய பொது போக்குவரத்து வாகனங்களின் பதிவை, நேபாள அரசு காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு போன்ற நகர்புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாளம் தன் பெட்ரோலிய தேவைகளுக்கு முற்றிலும் இறக்குமதியையே நம்பியுள்ளது.
இந்நிலையில், அனைத்து வகையான பொது போக்கு வரத்து புதிய வாகனங்களுக்கான பதிவை காலவரையின்றி நிறுத்தி வைக்க, அந்நாட்டு போக்குவரத்து துறை உத்தர விட்டுள்ளது. நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்சினை மற்றும் பொது போக்குவரத்தை முறையாக வும், அறிவியல் பூர்வமாகவும் நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தங் களை குறைக்கும் விதமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தடையானது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், மின்சார பொது போக்குவரத்து வாகனங் களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.
