காட்டாங்குளத்தூர், மே 25- பொம்மலாட்ட கலைக்கு புத்துயிர் கொடுத்து நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பகுத்தறிவாளர் கழக கலைத்துறை தலைவர் மு.கலைவாணன் 22.5.2026 அன்று இரவு 11 மணியளவில் முடிவெய்தினார்.
அவரது உடல் காட்டாங்குளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
23.5.2026 காலையிலிருந்தே திராவிடர் கழகத்தினர், திமுக, மற்றும் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர், மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பிற்பகல் 2.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலைமாமணி கலைவாணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி கலைவாணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கலைத் தெரிவித்தார்.
அவருடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார் சே.மெ.மதிவதனி, மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவர் ஆறுதல் கூற வந்த நிலையிலும் கலைவாணனின் மகன் பகலவன் – சீர்த்திக்கு பிறந்த இரண்டாம் குழந்தைக்கு கலைவாணன் என்று பெயர் சூட்டினார்.
முன்னதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை பொள்ளாச்சி உமாபதி ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
கலந்துகொண்டோர்:
மறைமலைநகர் நகராட்சித்தலைவர் தலைவர் ஜெ.சண்முகம், நகர மன்ற உறுப்பினர்கள் த.வினோத்குமார், அர.கிரிச்சந்திரன், கோகுலகிருஷ்ணன், அ.சவுரிராஜன் – மணிமேகலை, பேரறிவாளன், தீபம் மருத்துவமனை நிறுவனர் மரு.அ.பாண்டியன், தென்முகவன், கலைமாமணி காளீஸ்வரன், தாம்பரம் சுப்பிரமணி, தி.க.குணசேகரன் திருக்குறள் தமிழ்மகிழ்ன், சமத்துவக்கல்வி சியாம் சுந்தர். காஞ்சி அமுதன், நாத்திகம் நாகராசன், பெ.பழனி, உலக ஒளி, இரவி பாரதி, மறைமலைநகர் நகர காங்கிரஸ் தலைவர் முனைவர் ஜோசப்ராஜ், மறைமலைநகர் விசிக தலைவர் மணிமாறன், மறைமலைநகர் தேமுதிக ஜெ.ஏழுமலை, கல்பாக்கம் சொக்கலிங்கம், சொல்கேளான் கிரி, நுகர்வோர் தலைவர் டீக்காராம், மே 17 இயக்கம் கொண்டல்சாமி, குடியிருப்போர் சங்க க.பழனி,
கழகத் தோழர்கள்
தேவ.நர்மதா, திருப்பத்தூர் கவிதா, வெண்ணிலா, வி.சி.வில்வம், உத்ரா பழனிச்சாமி, நூர்ஜகான் ராஜு, சங்கீதா செம்பியன், சவுந்தரி கருணாகரன், சந்திரா முத்து, மண்ணிவாக்கம் அருணா, காஞ்சிபுரம் ரேவதி பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, மாநில செயலாளர் செல்வமீனாட்சி சுந்தரம், பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, கழக மகளிரணி துணைச் செயலாளர்கள் இறைவி, பெரியார்செல்வி, குடியாத்தம் தேன்மொழி, நெய்வேலி ஞானசேகரன், உடுமலை, கலைமணி சுரேஷ் துரை அருண், தாம்பரம் முத்தையன், அரும்பாக்கம் தாமோதரன், மோகன்ராஜ், கூடுவாஞ்சேரி ராசு, குணசேகரன், கருப்பையா, ஊரப்பாக்கம் ருத்ரகுமார், காஞ்சிபுரம் அ.வே முரளி சோழிங்கநல்லூர் வே.பாண்டு, செங்கல்பட்டு நரசிம்மன், பொன்.ராஜேந்திரன் முடியரசன், அறிவுச்சுடர், சி.தீனதயாளன் முருகன், ஆ.லியோன் ம.கருணாநிதி, காந்திநகர் ஏழுமலை, பண்பொளி, கண்ணப்பன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், வீரமணி, வெற்றிமணி, திவாரி, தனிபூட்கை, கனகா, பூங்குழலி, மு.பவானி, வை.கலையரசன், த.மரகதமணி, ஆதிலட்சுமி உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உரையாற்றியோர்
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன் இருவரும் ஒருங்கி ணைத் தனர்.
கலைகளால் வாழ்ந்து, கலைகளை வாழ்வித்த பெரியார் தொண்டர் கலைவாணனின் மனிதநேய பண்பையும், பகுத்தறிவு கருத்தையும், குழந்தை நலனில் அவர் கொண்ட ஈடுபாட்டையும், சுற்றுப்புறத் சுகாதாரம், முதியோர் நலன் என்று பல்வேறு துறைகளில் அவர் காட்டிய சமூக அக்கறையையும் நினைவு கூர்ந்து கீழ்க்கண்டோர் உரையாற்றினர்.
வழக்குரைஞர் அருள்மொழி, ச.பிரின்சு என்னாரசு பெரியார், சே.மெ.மதிவதனி, பா.மணியம்மை, இசையின்பன், புலவர் வெற்றியழகன், அற்புதம்மாள். ஆர்.டி.வீரபத்திரன், எல்லப்பன், அ.பா.கருணாகரன், திருக்குறள் வெங்கடேசன், சே.சகாயராஜ், மு.பிச்சைமுத்து காட்டாங் குளத்தூர் கோகுல், மு.அருண்குமார், மா.சமத்துவமணி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
இறுதியாய் பேசிய கலைவாணனின் மகன் பகலவன் தம் தந்தையார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர உறுதி ஏற்றார்.
இரங்கல் கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் இரங்கல் உரையை இறைவி வாசித்தார்.
இறுதி ஊர்வலம் 5.45க்கு புறப்பட்டு, காட்டாங்குளத்தூர் வீதிகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் அதைச் செயல்படுத்திய கலைவாணனின் ஊக்கத் தையும் நினைவுபடுத்தி முழக்கமிட்டு காட்டாங்குளத்தூர் இடுகாட்டில் 6.30க்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
