நீட் தேர்வு விவகாரம் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ கணக்குகள் அனைத்தும் முடக்கம்! நிறுவனர் அபிஜித் திப்கே அதிர்ச்சித் தகவல்!

2 Min Read

புதுடில்லி, மே 25- அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல மாறி, ஊடகவியலாளர் களாகவும் சமூக ஆர்வலர்களாகவும் எல்லாரையும் தாக்குகிறார்கள்” என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாக, அரசியல் வியூக நிபுணரும், பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் திப்கே என்பவரால் இணையத்தில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) என்ற நையாண்டி குழு/கட்சி தொடங்கப்பட்டது.

மக்களின் பிரச்சினைகளையும், அரசுக்கு எதிரான குரல்களையும் நையாண்டி பாணியில் சமூக ஊடகங்களில் எழுப்பிய இந்த சிஜேபி-க்கு, கோடிக்கணக்கான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

குறுகிய காலத்தில் இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாஜக, காங்கிரஸ் போன்ற முன்னணி கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகரித்து உலகளவில் பேசுபொருளானது.

கல்வி அமைச்சருக்கு
எதிரான பிரசாரம்

அண்மைய நீட் (NEET) வினாத் தாள் கசிவு விவகாரத்தில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இக்கட்சி தீவிர இணையப் பிரசாரத்தை மேற்கொண்டது.

இந்த பிரசாரத்தின் காரணமாகத் தனக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாக, அதன் ஸ்கிரீன் ஷாட்டு களையும் அபிஜித் திப்கே பகிர்ந் திருந்தார்.

ஒட்டுமொத்தமாக
முடக்கப்பட்ட கணக்குகள்

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அனைத்து சமூக ஊடகக் கணக்குகளும், இணையதளமும் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மீது ஒட்டுமொத்த ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கு, இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் எனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகிய அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு, முடக்கப்பட்டுள்ளன.

மாற்று கணக்காகத் தொடங்கப் பட்ட ‘கரப்பான் பூச்சி மீண்டும் வந்து விட்டது’ என்ற கணக்கும் நீக்கப்பட்டு விட்டது.

சிஜேபியின் இணையதளமும் தற்போது அணுக முடியாத நிலையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் புதிய இந்தியாவில், அரசிடம் பொறுப்புடைமையை கோரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் எங்கள் தளங்களில் வெளியாகும் எந்தவொரு பதிவையும் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையாகக் கருதக்கூடாது.”

இளைஞர்களுக்கு
முக்கிய அறிவுறுத்தல்

கணக்குகள் முடக்கப்படுவதற்கு முன்னதாக 23.5.2026 அன்று காலை 6.50 மணிக்கு பிஜேபி கட்சியின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

அதில், “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எந்தவொரு போராட்ட அழைப்பையும் விடுக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஆபத்தான ஒன்றாகச் சித்தரிப் பதற்காக அரசு ஏதேனும் ஒரு சிறிய அசம்பாவிதத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எனவே, ஆதரவாளர்கள் (கரப்பான்பூச்சிகள்) அனைவரும் அமைதியாகவும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *