மேகதாது விவகாரம் – தமிழ்நாடு அரசின் அடுத்த நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

3 Min Read

புதுடில்லி, மே 25 மேகதாது அணைக்கட்டு வழக்கில் 13.11.2025 தேதியிட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகளின் தனிப்பட்ட அறையில் விசாரிப்பதற்குப் பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிரா கரித்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு தமிழ்நாடு அரசின்  மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

கடந்த ஆண்டு
நவம்பர் 13 ஆம் தேதி…

தமிழ்நாடு அரசு, 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மேகதாது சமநிலை நீா்த்தேக்கம் மற்றும் குடிநீா் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி யைத் தொடர, கருநாடக மாநிலத்தின் ஓர் அங்கமான பெங்களூருவைச் சோ்ந்த கருநாடக காவேரி நீா்வாரி நிகம் லிமி டெட்க்கு, 22.11.2018 அன்று மத்திய நீர் ஆணையத்தால் வழங்கப்பட்ட அனு மதிக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தது. தமிழ்நாடு அரசின் அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி  தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியதாவது:

‘‘கருநாடக மாநிலமானது, மேகதாது சமன்படுத்தும் நீா்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் எனும் தலைப்பிலான திட்டத்தின் கீழ், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் ஓர் அணையை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது. இப்பிரச்சினை குறித்து ஆராயும் பொறுப்பு ஒரு நிபுணா் குழுவிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டு, அக்குழு வின் பரிசீலனையில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனுவானது முற்றிலும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு மாநிலமும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை, அம்மாநிலத்தின் நலனுக்கு உகந்ததெனத் தான் கருதும் வகையில் பயன்படுத்திக்கொள்ள முழுச் சுதந்திரம் பெற்றுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரின் மேலாண்மை மற்றும் பயன்பாடு தொடா்பான முடிவுகளில் தலையிடுவதற்கு, வேறெந்த மாநிலத்திற்கும் எவ்வித உரிமையும் இல்லை எனினும், அத்தகைய நடவடிக்கையின் காரணமாக அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறைவுபடும் பட்சத்தில் மட்டும், இதில் தலையிடலாம்’’ எனக்கூறி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது

மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

அந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு 11.12.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

காவிரி வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிலும், அதனை ஏற்றுக் கொண்டு, சில மாற்றங்களுடன் உச்சநீதிமன்றம் 2018 ஆம் வழங்கிய தீர்ப்பிலும் மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாத நிலையில், உச்சநீதிமன்றம் 13.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாதது, எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அம்மனுவில் கோரியிருந்தது.

இந்த மறுஆய்வு மனு 15.04.2026 அன்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோரின் தனிப்பட்ட அறையில் சேம்பர் விசாரணைக்குப் பட்டி யலிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகளின் அறைக்குப் பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு 13.4.2026 அன்று முறையிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு 15.04.2026 அன்று தங்களது அறை யில் பரிசீலித்த பின் தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அந்த அமர்வு இன்று  (21.5.2026) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மறு ஆய்வு மனு தள்ளுபடி

மறுஆய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடுவதற்கான மனு நிராகரிக்கப்படுகிறது. மறுஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவ ணங்களையும் நாங்கள் கவனமாகப் பரிசீலித்தோம். ஆனால், 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே, இந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் விளைவாக, இடைக்கால மனு ஏதேனும் நிலுவையில் இருப்பின், அதுவும் முடித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *