கணவரின் வருமான விவரங்களை மனைவிக்கு வழங்க முடியாது டில்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

புதுடில்லி, மே 4 தனிநபரின் வருமான வரி விவரங்கள் என்பது அவரின் தனிப்பட்டத் தகவல் என்றும், பொதுநலன் இல்லாத பட்சத்தில் அந்த விவரங்களை மற்றவர்களுக்கு வழங்க முடியாது என்றும் டில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த இணையர்கள் ஒன்று குடும்பப் பிரச்சினை காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம்  பெறுவதற்காக, அவரின் உண்மையான வருமான விவரங்களைத் தெரிந்துகொள்ள அந்தப் பெண் முடிவு செய்தார். இதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தனது கணவரின் வருமான விவரங்களைக் கோரி அவர் விண்ணப்பித்திருந்தார்.

தகவல் ஆணையத்தின் முந்தைய உத்தரவு:

அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய தகவல் ஆணையம் (CIC), கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், சம்பந்தப்பட்ட கணவரின் 2007-2008 ஆம் நிதியாண்டுக்கான வருமான விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கணவர் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார், தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனிப்பட்ட அந்தரங்கத் தகவல்

நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி, பொதுநலனுடன் தொடர்பில்லாத தனிப்பட்டத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின்படி, ஒரு தனிநபரின் வருமான வரி கணக்கு விவரங்கள் என்பது அவரின் தனிப்பட்ட அந்தரங்கத் தகவலாகும். மனைவி கோரியுள்ள விவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கணவரின் தனிப்பட்டத் தகவல்கள் ஆகும். இது ‘பொதுநலன்’ என்ற வரம்பிற்குள் வராததால், இந்த விவரங்களை வழங்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், குடும்பத் தகராறு போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரின் வருமான வரி விவரங்களை தகவல் அறியும் சட்டம் (RTI) மூலம் பெறுவது சட்டப்படி இயலாது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *