விடைத்தாளில் நாங்கள் எழுதியதையே படிக்க முடியவில்லை சிபிஎஸ்இ மாணவர்கள் கடும் அதிருப்தி!

புதுடில்லி, மே 24 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு விடைத்தாள்கள் இணைய வழியில்பதிவேற்றம் செய்யப்பட்டதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால், நாங்கள் எழுதிய பதில்களைத் நாங்களே படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி இணைய வழியில் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன.

இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

மங்கலான பக்கங்கள்: பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விடைத்தாள் நகல்கள் மிகவும் மங்கலாகவும் தரம் குறைந்ததாகவும் உள்ளன.

படிக்க முடியாத எழுத்துக்கள்: “நாங்கள் கஷ்டப்பட்டு எழுதிய விடைகளை எங்களாலேயே படித்துப் பார்க்க முடியவில்லை. பல பக்கங்கள் இருட்டாகவும், வரிகள் ஒன்றன் மேல் ஒன்று மறைந்தும் காணப்படுகின்றன.”

மதிப்பெண் சரிபார்ப்பில் சிக்கல்: விடைத்தாளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்காகவே கட்டணம் செலுத்தி இந்த நகல்களை வாங்கினோம். ஆனால், இதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாததால், எப்படி மதிப்பெண்களைச் சரிபார்ப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

பெற்றோர்களின் கோரிக்கை: விடைத்தாள் நகல் பெறுவதற்குக் கணிசமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், தெளிவான மாற்று விடைத்தாள் நகல்களை உடனே வழங்க வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்” என்று சிபிஎஸ்இ நிர்வாகத்திற்குப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பக் குளறுபடி குறித்து சிபிஎஸ்இ வாரியம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *