சென்னை, மே 23- நேபாளில் உள்ள ரங்க சாலா – போக்ரா என்ற இடத்தில் பன்னாட்டு சிலம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தங்கம் வென்ற 25 மாணவர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அண்மையில் நேபாளில் உள்ள ரங்கசாலா – போக்ரா என்ற இடத்தில் பன்னாட்டு சிலம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 29 தங்க பதக்கங்கள் மற்றும் overall வாகையர் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை மாவட்ட மாணவ, மாணவிகள் அரும்பாக்கத்தை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் ஆர்.கார்த்திக் தலைமையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். நேற்று (22.5.2026) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.கழக அலுவலகத்தில் அவர்கள், மு.க.ஸ்டா லினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பன்னாட்டு சிலம்ப விளையாட்டுப் போட்டி தங்கம் வென்ற மாணவர்கள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து!
Leave a Comment
