அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைப்பு! 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

சென்னை,ஜூன் 2- அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 8, 10, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர விரும்புவோர் https://skilltraining.tn.gov.in/detitiadm மூலம் விண்ணப்பிக்கலாம்.

8,10-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.

அளிக்கப்படும் பயிற்சிகள்: தையல் தொழில்நுட்பம்,

கோபா, அழகு சாதன வியல், கட்டடப்பட வரைவாளர், சுருக்கெழுத் தர் (தமிழ், ஆங்கிலம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

அரசு சலுகைகள்: பயிற்சியில் சேருவோருக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ.750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைப டக் கருவிகள், 2 செட் சீருடைகள், மூடு காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

இத்துடன் தமிழ்நாடு அரசு வழங்கும் உயர்கல்வி உதவித் தொகையாக மாணவிகளுக்கு கூடுதலாக ரூ.1,000 (6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி யில் பயின்றவர்களுக்கு) வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 8, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல், 5 பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களுடன் நேரில் வந்தும் பயிற்சியில் சேரலாம்.

ஓராண்டு பயிற்சிக ளுக்கு ரூ.235, ஈராண்டு பயிற்சிகளுக்கு ரூ.245 சேர்க்கைக் கட்டணமாக வசூலிக்கப்படும். கைப்பேசி: (9444017528, 96296 66279, 97897 59825,95660 58460, 63816 82005, 9840385562 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *