கொல்கத்தா, மே 15 மேற்கு வங்க முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி பதவியேற்றதைத் தொடர்ந்து, அங்குப் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 14 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான விலங்குகளை இறைச்சிக்காக வெட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவெளியில் விலங்குகளை வெட்டவும் அரசு தடை விதித்துள்ளது. விதிகளை மீறுவோருக்கு 6 மாதச் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகத்தான மனிதநேயம்!
மூளைச்சாவு இளைஞரால்
5 பேருக்கு வாழ்வு
5 பேருக்கு வாழ்வு
மதுரை, மே 15 தெத்துார் அருகே கொழிஞ்சிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சின்னக்காளை மகன் தேவநாதன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தேவநாதன் விபத்தில் அடிபட்டு மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 12இல் மூளைச்சாவு நிலையை அடைந்தார். மகனது உடல் உறுப்புகளை கொடையாக தர தந்தை சின்னக்காளை சம்மதித்தார்.
ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நோயாளி களுக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மெடிக்கல் சென்டர் நோயாளிக்கும் அனுப்பப் பட்டன.
கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டன. இதயம், இதய வால்வு, இரட்டை நுரையீரல் கொடையாக தர முன்வந்த நிலையில், பொருத்தமான நோயாளிகள் கிடைக்காததால் அவை பயன்படுத்தப்படவில்லை. இறந்த பின்பும் அடுத்தவர்களுக்குப் பயன்பட்ட தேவநாதன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உ.பி.யில் சூறாவளிக் காற்றுடன் கனமழை
100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
லக்னோ, மே 15 உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று (14.5.2026) மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்ததுடன், சூறாவளி காற்று வீசத் துவங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள், பெரிய மரங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியில் தஞ்சமடைந்தனர்.
சூறாவளி காற்று காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் கீழே விழுந்தன. விளம்பர பதாகைகளும் சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பறந்தன. இதனால், மாநிலம் முழுவதும்100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக பிரயாக்ராஜ் நகரில் 21 பேரும்,
பதோஹி நகரில் –- 18, மிர்சாப்பூரில் – 15, பதேபூரில் – 10 உன்னாவோ மற்றும் பதுவான் நகரங் களில் தலா 6 பிரதாப்கார்க் மற்றும் பேரலியில் தலா இருவர், சிதாப்பூர், ரே பரேலி, சந்தவுலி, கான்பூர் தேஹட், ஹர்தோய், சம்பல் பகுதிகளில் தலா 2 பேர் என உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கவுசம்பி, ஷாஜஹான்பூர், சோன்பந்த்ரா மற்றும் லகமிபூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால், மீட்புப்பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இதனை அகற்றிவிட்டு, மீட்புப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் குடும்பங் களுக்கு நிவாரண நிதி அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
