பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 1ஆம் தேதி முதல் தொடக்கம்!

1 Min Read

சென்னை, மே 21- தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இடம்: இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நேரடியாக நடைபெறவுள்ளன.

அழைப்பு விவரம்

தகுதியான மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் நேரில் வர வேண்டும் என்ற விவரம், அவர்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது உரிய விளையாட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கல்வி ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும்.

ஜூன் 6ஆம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இணையவழி ஆவணச் சரிபார்ப்பு ஜூன் 8ஆம் தேதி தொடங்கி, ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org என்ற முகவரியைப் பார்க்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *