தோல்வி எங்களுக்கு புதிதல்ல – துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும் – காலம் பதில் சொல்லும்!

3 Min Read

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.

சென்னை, மே 7– தி.மு.க. கூட்டணிக் கட்சி தொண்டர்களின் உழைப்பினால் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 5 சட்டமன்ற உறுப்பினர்களை பணயம் வைத்து கயமையுடன் மாற்று இடத்திற்கு சென்றுள்ளார்கள். தி.மு.க.வுக்கு துரோகம் புதிதல்ல! அவை நிரந்தரமும் அல்ல என்பது எங்களுக்குப் புரியும்! காலம் பதில் சொல்லும் என தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

காங்கிரஸ் செய்தியால் எங்களுக்கு திகைப்பில்லை!

எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால், அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.

குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்த தொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்க ளுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார்.

இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்பட வில்லை.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள்.

பா.ஜ.க. செய்வதையே
காங்கிரஸ் கட்சியும் செய்கிறது!

ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்ப வாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. தி.மு.கழகம் தலை மையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இதுவாகும்.

குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி யாரை வேண்டு மானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால், யாருக்கு ஆதர வளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அற மாக இருக்கும்.

ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக முன்னி றுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில், 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன.

ராகுல் காந்தியை
முன்னிறுத்திய தி.மு.க.!

இரண்டு தேர்தல்களில்  ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து, நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது தி.மு.க. கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கொள்கை ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் தி.மு.கழகம்.

தோல்வி எங்களுக்கு புதிதல்ல!

துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல!

ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்ப தும் எங்களுக்கு தெரியும்!

காலம் பதில் சொல்லும்!

இவ்வாறு தி.மு.க. பொருளாளர்
டி.ஆர். பாலு எம்.பி., அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *