தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 1– தமிழ்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டண விகிதம் இன்று (1.9.2026) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்கள் மாற்றி யமைக்கப்படுவது வழக்க மான நடைமுறையாகும். அதன் ஒருபகுதியாக, தற்போது விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜா பாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கான கட்டணம் ரூ. 240-லிருந்து ரூ. 250-ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக் கான கட்டணம் ரூ. 380-லிருந்து ரூ. 400-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சரக்கு வாகன மற்றும் பேருந்து போன்ற வாகனங்கள் ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் போது, தற்போதுள்ள கட்டணத்தை விட ரூ. 15 வரை கூடுதலாக வசூலிக் கப்படும்.

இந்தத் திடீர் கட்டண உயர்வால் சரக்கு வாகனங் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி, அத்தியா வசியப் பொருட்கள் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *