பைசாபாத், மே 3 2018-ஆம் ஆண்டு கருநாடக தேர்தல் பிரசாரத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆடியோ கிளிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க, ராகுல் காந்தியின் குரல் மாதிரியை (Voice Sample) தடயவியல் சோதனைக்காகப் பெற வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுல்தான்பூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப் பினர்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்தியின் குரல் மாதிரியைக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நேற்று (2.5.2026) உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கம்
பால்டா தொகுதிக்கு
நவம்பர் 21-இல் மறுதேர்தல்
நவம்பர் 21-இல் மறுதேர்தல்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புதுடில்லி, மே 3 மேற்குவங்க மாநிலத்தின் பால்டா சட்டமன்றத் தொகுதிக்கு வரும் நவம்பர் 21-ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (2.5.2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது, பால்டா தொகுதிக்குட்பட்ட சில குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
தற்போது அந்த இடங்களுக்குப் புதிய தேதியை அறிவித்துள்ள ஆணையம், வரும் 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடி வுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்தல் சுமுக மாக நடைபெறுவதை உறுதி செய்யப் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை விவகாரம்
ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிக்கை
சிவகங்கை, மே 3 காரைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், இந்த ஆண்டிற்கான (2026-2027) ‘பால்வதிகா 2’ (எல்.கே.ஜி.) வகுப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அருள்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒதுக்கப்பட வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை.தற்காலிகப் பட்டியலில் 4-ஆவது இடத்தில் இருந்த தனது மகனின் பெயர், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது, ‘பால்வதிகா 1’ (பிரி.– கேஜி) மாணவர்களுக்கே அனைத்து இடங் களும் நிரப்பப்பட்டுவிட்டதாகக் கூறி விதிகளை மீறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், இது தொடர்பாக: ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தின் டில்லி ஆணையர்,சென்னை மண்டல துணை ஆணையர், காரைக்குடி பள்ளி முதல்வர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆணையிட்டார்.
