தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்! போக்குவரத்துக் கழகம் தகவல்

1 Min Read

சென்னை,மே 2- மே தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மே தினம் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், தலை நகர் சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்கத்தை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பேருந்து பயணத்தை மக்கள் அதிகளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் (30.4.2026) 2.13 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் கூறியதாவது:

தொடர் விடுமுறையை யொட்டி பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழங்கள் மூலமாக சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏப்.30ஆம் தேதி முதல் நேற்று அதிகாலை 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இச்சிறப்புப் பேருந்து பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *