தி.மு.க.வின் முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இவ்வாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலைத் தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்
பெரியார் விருதுக்குத் தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா,
அண்ணா விருதுக்கு சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்,
கலைஞர் விருதுக்குத் தி.மு.க. – துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா,
பாவேந்தர் விருதுக்கு மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி
என்.வி.என். சோமு,
பேராசிரியர் விருதுக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி,
மு.க.ஸ்டாலின் விருதுக்கு தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருதுகள் பெற உள்ளவர்களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகம் பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதே போல, மூத்த பத்திரிகையாளரும், சீரிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ப. திருமாவேலன் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம் விருது’ என்பது பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். அவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
3.9.2026
சென்னை
