உலகின் மிகச்சிறிய கிராமம்: ஒரு பெண்ணுக்காக இயங்கும் அமெரிக்காவின் மோனோவி கிராமம்!

வாசிங்டன், ஏப். 28- ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தாலே ஆச்சரி யப்படும் இந்த காலத்தில், ஒரு கிராமத்திற்கே ஒரே ஒரு நபர் மட்டுமே வசிப்பது சாத்தியமா? அமெரிக்காவின் நெப் ராஸ்கா மாகாணத்தில் உள்ள மோனோவி (Monowi) கிராமம் இந்த அதிசயத்தை நிகழ்த்தி வருகிறது. உலகின் மிகச்சிறிய கிராமமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மோனோவியில், எல்சி எய்லர் (Elsie Eiler) என்ற 90 வயது மதிக்கத்தக்க பெண்மணி மட்டுமே வசித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக இவரே இந்த கிராமத்தின் ஒரே குடிமகள்.

கடந்த 2004ஆம் ஆண்டு இவரது கணவர் ரூடி காலமானார். அதன்பிறகு அந்த கிராமத்தில் எல்சி மட்டுமே எஞ்சியிருந்தார். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதான பற்று காரணமாக, எல்சி அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

வேடிக்கையான செய்தி என்னவென்றால், அந்த கிராமத்தின் அனைத்து பொறுப்புகளையும் இவரே கவனிக்கிறார்:

அவரே அந்த கிராமத் தின் மேயர். அவரே வரி வசூலிப்பவர். அவரே அங்குள்ள நூலகத்தை பராமரிப்பவர். அங்குள்ள ஒரே உணவகத்தையும் (Tavern) இவரே நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு ஆண் டும் கிராமத்தின் சாலை விளக்குகளை பராமரிக்கவும், தண்ணீருக் கான நிதியைப் பெறவும் தனக்குத் தானே விண் ணப்பித்து, அந்தத் திட்டங்களுக்கு மேயராக அவரே கையெழுத்திட்டு ஒப்புதலும் அளிக்கிறார்.  தனிமையில் இருந்தாலும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடுவதை எல்சி மகிழ்ச்சியுடன் மேற்கொள்கிறார். ஒரு கிராமத்தின் அடை யாளத்தை ஒரு தனிநபர் இத்தனை ஆண்டுகளாகக் காத்து வருவது உலகளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *