வாசிங்டன், ஏப். 28- ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தாலே ஆச்சரி யப்படும் இந்த காலத்தில், ஒரு கிராமத்திற்கே ஒரே ஒரு நபர் மட்டுமே வசிப்பது சாத்தியமா? அமெரிக்காவின் நெப் ராஸ்கா மாகாணத்தில் உள்ள மோனோவி (Monowi) கிராமம் இந்த அதிசயத்தை நிகழ்த்தி வருகிறது. உலகின் மிகச்சிறிய கிராமமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மோனோவியில், எல்சி எய்லர் (Elsie Eiler) என்ற 90 வயது மதிக்கத்தக்க பெண்மணி மட்டுமே வசித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக இவரே இந்த கிராமத்தின் ஒரே குடிமகள்.
கடந்த 2004ஆம் ஆண்டு இவரது கணவர் ரூடி காலமானார். அதன்பிறகு அந்த கிராமத்தில் எல்சி மட்டுமே எஞ்சியிருந்தார். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதான பற்று காரணமாக, எல்சி அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.
வேடிக்கையான செய்தி என்னவென்றால், அந்த கிராமத்தின் அனைத்து பொறுப்புகளையும் இவரே கவனிக்கிறார்:
அவரே அந்த கிராமத் தின் மேயர். அவரே வரி வசூலிப்பவர். அவரே அங்குள்ள நூலகத்தை பராமரிப்பவர். அங்குள்ள ஒரே உணவகத்தையும் (Tavern) இவரே நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு ஆண் டும் கிராமத்தின் சாலை விளக்குகளை பராமரிக்கவும், தண்ணீருக் கான நிதியைப் பெறவும் தனக்குத் தானே விண் ணப்பித்து, அந்தத் திட்டங்களுக்கு மேயராக அவரே கையெழுத்திட்டு ஒப்புதலும் அளிக்கிறார். தனிமையில் இருந்தாலும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடுவதை எல்சி மகிழ்ச்சியுடன் மேற்கொள்கிறார். ஒரு கிராமத்தின் அடை யாளத்தை ஒரு தனிநபர் இத்தனை ஆண்டுகளாகக் காத்து வருவது உலகளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

