ஒரே மாதம்.. 46,750 ஊழியர்கள் பணிநீக்கம்… ஒட்டுமொத்தமாக களத்தில் குதித்த மூன்று பெரிய நிறுவனங்கள்!

2 Min Read

மெட்டா நிறுவனம் மட்டும் ஏறத்தாழ 8,000 வேலைகளைக் குறைக்கத் தயாராகி வருகிறது. இது அதன் மொத்தப் பணியாளர்களில் சுமார் 10 சதவீதமாகும்.

ஏஅய் டேட்டா சென்டர்களை (செயற்கை நுண்ணறிவு தரவு மய்யங்கள்) அமைப்பதற்கான மிகப் பெரிய முதலீடுகள் காரணமாக தொழில்நுட்ப துறையில் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெறும் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 46,750 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

உலக அளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலும் இத்துறைகளில் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்க்கின்றனர்.

இந்தச் சூழலில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஏஅய் டேட்டா சென்டர்களை அமைப்பதற்கான மிகப் பெரிய முதலீடுகள் காரணமாக தொழில்நுட்ப துறையில் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெறும் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 46,750 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

அதன்படி மெட்டா நிறுவனம் மட்டும் ஏறத்தாழ 8,000 வேலைகளைக் குறைக்கத் தயாராகி வருகிறது. இது அதன் மொத்தப் பணியாளர்களில் சுமார் 10 சதவீதமாகும்.

மேலும், முன்னர் ஆள்சேர்ப்பு செய்யத் திட்டமிட்டிருந்த ஆயிரக் கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என்றும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதேபோல், ஆரக்கிள் நிறுவனத் தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் 30,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

எனினும், பணிநீக்கங்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வில்லை, ஆனால் பல அறிக்கைகள் மற்றும் ஊழியர்களின் கூற்றுக்கள் அந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.

இந்தியாவில், சுமார் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டதாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம், நேரடிப் பணிநீக்கங்களுக்குப் பதிலாக, அந்நிறுவனம் தனது அமெரிக்கப் பணியாளர்களில் சுமார் 7 சதவீதத்தினருக்கு, அதாவது ஏறத்தாழ 8,750 ஊழியர்களுக்கு, தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தனது 51 ஆண்டு கால வரலாற்றில், மைக்ரோசாப்ட் இது போன்ற ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

நிறுவனங்கள் இதை மறுசீரமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவில் முதலீடு என்று சொன்னாலும் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தவிர, இது தொழில்நுட்பத் துறையில் உள்ள பலருக்கு மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *