புதுடில்லி, ஏப். 24– ஒன்றிய அரசின் பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ (CBSE), மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய மாற்றத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 15 தொடக்கம்:
2026-ஆம் ஆண்டிற் கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு மே மாதம் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த இரண்டாவது தேர்வை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டிய அவசிய மில்லை. கூடுதல் மதிப் பெண் பெற விரும்பும் மாணவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.
ஒரு மாணவர் இரண்டாவது கட்டத் தேர்வில் அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை எழுத அனுமதிக்கப்படுவார். முதல் தேர்வு மற்றும் இரண்டாம் தேர்வு ஆகிய இரண்டில், எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அந்த மதிப்பெண்ணை மாணவர் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறையானது மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை குழப்ப நிலையில் தள்ளி தங்கள் தகுதியானவர்கள் தானா என்ற அய்யப்பாட்டு மனநிலையில் வைக்க குமே தவிர இரண்டு பொதுதேர்வு என்பது எக்காலத்திற்கும் மாண வர்களுக்கு நன்மை தராது என்றும் கல்வியார்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் புதியகல்வி கொள்கையின் படி இரண்டு பொதுத்தேர்வுகள் மாணவர்களை தேர்வு சுமையில் இருந்து வெளியேற்றவே என்றும் விரையில் அனைத்து பள்ளிக்கல்வியில் இதனை நடைமுறைப்படுத்தும் பணிகளை துவக்க உள்ளதாகவும் ஒன்றிய கல்வி அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
