புதுடில்லி, ஏப்.19 உத்தரப் பிரதேசம், பீகார், மகாராட்டிரா, மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 5 மாநிலங்கள் ஆகும். உத்தரப் பிரதேசம், நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதி யைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கருநாடகா முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில், சுமார் 24 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்றாகும். அங்கு வசிக்கும் கோடி மக்கள் தொகை எண்ணிக்கை 12 கோடியாகும்.
இந்த பட்டியலில் இடம் பெற்ற மூன்றாவது பெரிய மாநிலம் மகாராட்டிரா ஆகும். அங்கு சுமார் 12 கோடி மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்தில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், மத்தியப் பிரதேசத் தில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், ராஜஸ்தான் மாநிலத்தில் 8 கோடி மக்கள் தொகை உள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தில் 7 கோடிக் கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 7 கோடிக்கும் அதகிமான மக்கள் தொகை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கருநாடகா மாநிலத்தில் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், ஆந் திரப்பிரதேசத்தில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

