தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம் போடும் பா.ஜ.க. கூட்டணிக்குப் பட்டை நாமம் சாத்துவீர்!

1 Min Read

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படு வதற்காக 27.1.2019 அன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பொழுது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்த லுக்காக பி.ஜே.பி.யால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை (பக்கம் 21) என்ன கூறுகிறது?

‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி முழுமையாக முடிப்போம்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் முழுமையாக முடிக்கப்படவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விரைவுபடுத்தி முழுமையாக முடிப்போம் என்று பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை கூறுகிறது என்றால், இதன் பொருள் என்ன?

ஏழு ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்கவில்லை என்பதை ஒன்றிய பி.ஜே.பி. அரசே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதே!

பி.ஜே.பி.க்கு வரும் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டாமா?

அதைவிட ஒரு முக்கியமான தகவல்!

கவனியுங்கள்! கவனியுங்கள்!!

கேளுங்கள்! கேளுங்கள்!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, வட மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன!

ஜார்கண்ட் – தெயோகர்

குஜராத் – ராஜ்கோட்

தெலங்கானா – பீபி நகர்

உத்தரப்பிரதேசம் – கோரக்பூர்

மேற்கு வங்காளம் – கல்யாணி

பஞ்சாப் – பட்டிண்டா

அசாம் – கவுகாத்தி

ஜம்மு காஷ்மீர் – பிலாஸ்பூர்

தெரிந்துகொண்டீர்களா?

மதுரைக்குப் பின்னர் தொடங்கப்பட்ட மேற்கண்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

ஆனால், மதுரையில்?

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணை போகும் கூட்டணிக் கட்சிகளுக்கும் தேர்தலில் பாடம் கற்பிப்பீர்!

வெல்லட்டும் தி.மு.க. கூட்டணி!

வீழட்டும் என்.டி.ஏ. கூட்டணி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *