ஒன்றிய அரசு அலுவலர்களுக்கான பணி நியமனத்தில் தமிழ்நாடு இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்! உலக இளைஞர் நாள் மாநாட்டில் தீர்மானம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, ஆக.12- தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் உலக இளைஞர் நாள் விழா மாநாடு நேற்று நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் சமைய செல்வம் தலைமை வகித்தார். கட்சி தலைவர் பொன்குமார், அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு பேசினர்.

மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்தது போன்றவற்றிற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலர்களுக்கான பணி நியமனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *