தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மோடியால் கட்டுப்படுத்த முடியாது!

3 Min Read

சமூகநீதி மண் தமிழ்நாடு! – ராகுல் காந்தி புகழாரம்

சோளிங்கர், ஏப்.19 “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மோடியால் கட்டுப்படுத்த முடியாது! சமூகநீதி மண் தமிழ்நாடு என்றும், மோடி என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பாண்டியநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (18.4.20206) நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது, திமுக வேட்பாளர்கள் அமைச்சர் ஆர்.காந்தி, ஈஸ்வரப்பன், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம், வி.சி.க. வேட்பாளர் எழில் கரோலின் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியதாவது:

இந்தத் தேர்தல் மூலமாக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டினுள் நுழைய முயல்கிறது. அதனை நாம் அனு மதிக்கக்கூடாது. நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில் நரேந்திர மோடி, அமித் ஷா தொகுதி மறுவரையறைச் சட்டத்தை கொண்டுவர முயன்றனர். அதனை, நாம் முறியடித்துள்ளோம்.

அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்கும் மோடி!

மக்களவையில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதாக சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் உண்மையை குழிதோண்டிப் புதைக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க நினைக்கிறாா்கள். தமிழ்நாட்டையும், வடகிழக்கு மாநிலங்களையும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தை மோடி சிதைக்க முயற்சிக்கிறார்.

எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கி யது இந்தியா. அனைத்து மாநிலங்களுக்கும் குரல் கொடுக்கும் உரிமை உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகள், ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் அடையாளம் மற்றும் சித்தாந்தத்தை அழிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. மோடி, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்கிறார். ஆனால், இந்தியா பல்வேறு மொழிகளால் பிணைக்கப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு
ஜனநாயகத் தோல்வி!

தமிழ் சாதாரண மொழி அல்ல. தமிழ் தான் இந்திய நாட்டுக்கு தாய். தமிழ்நாடு, தமிழ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டிக்கிறோம். ஊழலில் மலிந்துள்ள அ.தி.மு.க.-வை பா.ஜ.க. முழுவதுமாக கைப்பற்றி வருகிறது. அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி பா.ஜ.க.வினர் பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், தமிழ்நாட்டை பா.ஜ.க. ஆளமுடியாது. தமிழ்நாட்டை, தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் தான் ஆளவேண்டும். தமிழ்நாட்டை யாரும் முகமூடி போட்டுக்கொண்டு ஆளமுடியாது. நாங்கள் டில்லியை ஆளும் போது தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை.

நாங்கள் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான கூட்டணியில் உள்ளோம். நாங்கள் மோடி அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடித்துள்ளோம். மோடி அரசுக்கு இது ஒரு ஜனநாயகத் தோல்வி. அரசியலமைப்புச் சட்டத்தைச் சீரழிக்கும் முயற்சியை தடுத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பா.ஜ.க. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு – காஷ்மீர் முதல் அசாம் வரை தவறிழைக்க முயற்சித்த பா.ஜ.க.-வைத் தடுத்துள்ளோம். நாட்டின் மொழி, சித்தாந்தத்தை சிதைக்க நினைக்கிறது பா.ஜ.க. அதனை நம் கூட்டணியால் தடுத்து நிறுத்துவோம். நம் எல்லையைக் கூட பா.ஜ.க.-வால் நெருங்க முடியாது.

சமூகநீதி மண்
தமிழ்நாடு!

தமிழ்நாடு வளமான நாடாக வளர்ந்துள்ளது. சமூக நீதிக்கான நாடு தமிழ்நாடு. பா.ஜ.க. தமிழ்நாட்டைக் குறைத்து மதிப்பிடுகிறது. இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டு வார்கள். தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, கல்வி நிதி மற்றும் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை தாமதப்படுத்தி வரு கிறார்கள். நான் டில்லியில் உங்களுக்கான சேவகனாகவும், குரலாகவும் இருக்கிறேன். மோடி என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மோடியால் கட்டுப்படுத்த முடியாது!

மோடி அமெரிக்காவால் கட்டுப்ப டுத்தப்படுகிறார். ஏனென்றால், நரேந்திர மோடியின் நிதி அமைப்பை டிரம்ப் அறிவார். அதானிக்கும், மோடிக்கும் உள்ள தொடர்பை அவர் புரிந்துகொள்கிறார். அதேபோல நரேந்திர மோடி தமிழ்நாட்டின் முதலமைச்சரையும் கட்டுப்படுத்த நினைக்கிறார்.

அதற்காகத் தான் அவர் அ.தி.மு.க.-வை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரால் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்குத் தெரியும். மு.க.ஸ்டாலின் சுதந்திரமானவர், மோடியால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.’’

இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *